புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2019 (16:49 IST)

அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் திரைப்படங்களை வெளியிடக்கூடாது.. உரிமையாளர்கள் கறார்

அமேசான், நெட்ஃப்ளிக்ஸில் 100 நாட்கள் வரை திரைப்படங்களை வெளியிடக்கூடாது என திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் திரைப்படங்களை வாங்கி தங்களது இணையத்தள ஆப்களில் வெளியிடுகின்றன. இதற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு இருக்கும் நிலையில், இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் அமேசான், நெட்ஃப்ளிக்ஸில் 100 நாட்கள் வரை திரைப்படங்களை வெளியிட கூடாது எனவும், அப்படி வெளியிட்டால் அந்த தயாரிப்பாளர்களின் திரைப்படத்தை தியேட்டரில் திரையிட மாட்டோம் எனவும் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.