வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 14 டிசம்பர் 2020 (20:44 IST)

நியூஸ் தமிழ் சேனலில் இருந்து நெல்சன் சேவியர் விலகல்: டுவிட்டரில் அறிவிப்பு!

நியூஸ் தமிழ் சேனலில் இருந்து நெல்சன் சேவியர் விலகல்
கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி பிரபலங்கள் தாங்கள் பணிபுரிந்த சேனல்களில் இருந்து விலகி வரும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன என்பதை பார்த்தோம். தந்தி டிவியில் இருந்து ரங்கராஜ் பாண்டே, நியூஸ்18 சேனலில் இருந்து குணசேகரன் உள்ளிட்டோர் விலகிய நிலையில் தற்போது நியூஸ்7 சேனலில் இருந்து நெல்சன் சேவியர் விலகியுள்ளார் 
 
நியூஸ்7 தொலைக்காட்சியில் அரசியல் குறித்த விவாதங்களை காரசாரமாக கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வந்தவர் நெல்சன் சேவியர். இவர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி இருந்தாலும் கலந்து கொண்ட அரசியல் பிரபலங்களை சரியான வகையில் கையாள்வார் என்ற கருத்தும் இருந்தது 
 
இந்த நிலையில் திடீரென அவர் நியூஸ் 7 சேனலில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்ட நிலையில் அதனை தற்போது அவர் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் ’நியூஸ்7 தமிழ் உடனான இந்த நீண்ட பயணத்தில் உடன் இருந்த அனைவருக்கும் எனது அன்பு. விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்’ என்று தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து அவர் நியூஸ் 7 சேனலில் இருந்து விலகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது