1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (18:20 IST)

எம்.பி. ஆனார் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா..! மீண்டும் மாநிலங்களவை எம்.பி-யான எல்.முருகன்..!!

jp natta
பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா, குஜராத் மாநிலத்தில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில்,  மத்தியப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக எல். முருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 
மக்களவைத் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில்,  13 மாநிலங்களில் இருந்து தேர்வான  56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிவடைய உள்ளது.
 
ஏப்ரல் 2 மற்றும் ஏப்ரல் 3 ஆம் தேதிகளில் 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ள நிலையில், அந்த பதவிகளுக்கு வரும் 27 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்துள்ளது
 
இந்நிலையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா, குஜராத் மாநிலத்தில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
L Murugan
ஏற்கனவே மத்தியப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான எல்.முருகன், மத்திய இணையமைச்சராக பணியாற்றி வருகிறார்.

 
இந்நிலையில், மீண்டும் அதே மாநிலத்தில் இருந்தே மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.