ரயில் எஞ்சின் மேலேறி செல்பி: 10ஆம் வகுப்பு மாணவர் பரிதாப பலி!
ரயில் எஞ்சின் மேலேறி செல்பி: 10ஆம் வகுப்பு மாணவர் பரிதாப பலி!
உலகில் மிக வேகமாக பரவியது செல்போன் என்பதும் குறிப்பாக ஸ்மார்ட்போன் பிரபலமானதும் இளைஞர்களிடையே செல்பி என்னும் மோகம் தொற்றிக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
உலகம் முழுவதும் செல்பி மோகத்தால் பலர் உயிரிழந்து வருகின்றனர் என்றும் தங்களது உயிரை கூட கவலைப்படாமல் செல்ஃபி எடுக்கும் பலர் விலைமதிப்பில்லாத உயிர்களை இழந்து வருகின்றனர் என்பது குறித்த செய்திகளையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் நெல்லையில் ரயில் என்ஜின் மேல் ஏறி செல்பி எடுத்த பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை ரயில் நிலையத்தில் இன்று காலை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஞானசேகரன் என்பவர் ரயில் என்ஜின் மேல் ஏறி செல்பி எடுக்க முயற்சி செய்தார்
அப்போது அவர் செல்பி எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென உயர் அழுத்தம் கொண்ட மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனை அடுத்து அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. ரயில் இன்ஜின் மேலே ஏறி செல்பி எடுத்தால் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது