1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (16:53 IST)

நெல்லை சாதிய கொலை: பூசாரியை அடக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும்!

இரு வேறு கொலை சம்பவங்கள் போலீசார் தீவிர கண்காணிப்பில் பாளையம்கோட்டை
 
நெல்லையில் கோவில் பூசாரியின் உடலை கோவில் அருகில் அடக்கம் செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் , பொதுமக்கள் ஆட்சியரிடம் மனுக்கொடுத்த திரண்ட நிலையில் பாளையங்கோட்டையில் போலீசார் தடுத்து நிறுத்தி போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் அருகில் இருந்த அழகுமுத்துக்கோன் சிலை மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
நெல்லை மாவட்டம் சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில் பூசாரி சிதம்பரம் என்ற துரை கடந்த 18-ந்தேதி கோவிலில் கடைகள்  அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் . இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் அவரது உறவினர்கள் பூசாரி உடலை கோவில் அருகேயே அடக்கம் செய்ய வேண்டும் , அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் , நிவாரணமாக 20 லட்சம் வழக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  இன்று 6-வது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இதனிடையே இன்று திரண்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க முடிவு செய்து பாளையங்கோட்டை அழகுமுத்துக்கோன் சிலை முன்பு திரண்டனர் , சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் கூடிய நிலையில் அவர்களை ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர் . 
 
அப்போது கூட்டத்தில் இருந்து கனிராஜ் என்ற நபர் அழகுமுத்துக்கோன் சிலை மீது ஏறி உடலில் மண்ணெண்ணையை ஊற்றியும் , கழுத்தில் அரிவாளை வைத்தும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார் . பின்னர் அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவரை இறங்கச் செய்தனர் . தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் , வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 
 
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில் கொலை செய்யப்பட்ட பூசாரியின் உடலை கோவில் அருகிலேயே அடக்கம் செய்ய வேண்டும் , எங்களின் பிரதான கோரிக்கை , இது நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்  .