1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (12:18 IST)

பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் - ஒருவர் பலி.

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்.
 
பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் முத்து மனோ (27) என்பவர் பலியானார். இவர், வெடிகுண்டு வைத்திருந்த வழக்கில் கடந்த 8ந்தேதி கைதாகி பாளை சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மனோ பலியானார். இதையடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறை முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து சாலை மறியல் ஈடுபட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.