சாலை அமைக்க பழங்கால கோவில்களை இடிக்க திட்டம்! மக்கள் எதிர்ப்பு!
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளுக்காக பழமை வாய்ந்த கோவில்கள் இடிக்கப்பட உள்ளதாக வெளியான செய்தி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் பாரத்மாலா ப்ரயோஜனா திட்டத்தின் மூலம் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த விரிவாக்க பணிகளை செயல்படுத்துவதற்கு கடலூர், தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 22 கோவில்கள் இடையூறாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த கோவில்களை அகற்ற வேண்டிய நிலைமை ஏற்படலாம் என கூறப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கோவில்களை இடிக்கக்கூடாது என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா “சாலை திட்டங்களுக்காக பழங்கால கோயில்கள் இடிக்கப்பட உள்ளனர் அதற்கு பதிலாக மாற்று வழி கண்டுபிடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணைக்கு தமிழக தலைமைச் செயலாளர் அறிவுறுத்த வேண்டும்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.