வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinothkumar
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2020 (11:22 IST)

தேசிய கல்விக்கொள்கையை தமிழில் மொழிபெயர்த்த தன்னார்வலர்கள் – லிங்க் உள்ளே!

மத்திய அரசு நிறைவேற்ற இருக்கும் தேசிய கல்விக்கொள்கையை தமிழகத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மொழிபெயர்த்து உள்ளனர்.

மத்திய அரசின் புதிக கல்விக் கொள்கை திட்டம் தமிழகத்தில் ஏகப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது, தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என முதல்வர் கூறியுள்ளார். இதற்கு பலர் நன்றி தெரிவித்துள்ள நிலையில் மொத்தமாகவே புதிய கல்விக் கொள்கையை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தன்னார்வலர்கள் பலர் ஒன்று சேர்ந்து ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட சில மொழிகளில் மட்டுமே இருந்த கல்விக்கொள்கையை தமிழில் மொழி பெயர்த்துள்ளனர். அதனை இலவசமாக அனைவரும் டவுன்லோட் செய்து கொள்ளும் விதமாக பகிர்ந்துள்ளனர்.