1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 20 நவம்பர் 2021 (07:22 IST)

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா? சென்னை நிலவரம்

கடந்த சில வாரங்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக மட்டும் பெட்ரோல் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த 14 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை ஒரே விலையில் விற்பனை ஆகி வந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
இதனையடுத்து நேற்றைய நிலையிலேயே இன்றும் பெட்ரோல் டீசல் விலையை சென்னையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 என்றும் டீசல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 91.43 என்றும் விற்பனையாகி வருகிறது
 
கடந்த 15 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் இருந்து வருவது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது