செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2019 (07:45 IST)

10 பேர் சேர்ந்து பொதுச்செயலாளரை தேர்ந்தெடுத்தால் அது கட்சியா? நாஞ்சில் சம்பத்

10 பேர் சேர்ந்து ஒரு பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியுமென்றால், அது கட்சி அல்ல, 'கும்பல்' என நாஞ்சில் சம்பத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 
அமமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென டிடிவி தினகரன் பொதுச்செயலாளராக அக்கட்சியின்கர்களால் தேர்வு செய்யப்பட்டார். ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்கு முன் செயற்குழு, பொதுக்குழு கூட்டி ஆலோசனை செய்ய வேண்டும். ஆனால் எந்த ஆலோசனையும் இன்றி திடீரென பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் அமமுகவின் பொதுச்செயலாளர் தேர்வு குறித்து விமர்சனம் செய்த் நாஞ்சில் சம்பத், '10 பேர் சேர்ந்து ஒரு பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியுமென்றால், அது அரசியல் கட்சி அல்ல என்றும், அதுவொரு கும்பல் என்றும் தெரிவித்தார். ஆனால் அந்த கும்பலில் தான் நாஞ்சில் சம்பத் கடந்த சில மாதங்களுக்கு முன் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் அதிமுக உரிமை வழக்கை தொடர்ந்து நடத்துவதற்குதான் சசிகலாவை பொதுச்செயலாளர் பொருப்பில் இருந்து தினகரன் நீக்கினார் என்றும், அதிமுக வழக்கை சசிகலா தலைமையில் நடத்தவும், அமமுகவை அரசியல் கட்சியாக்கி தினகரன் நடத்தவும் திட்டமிட்டே இந்த மாற்றத்தை அவர் ஏற்படுத்தியிருப்பதாகவும் அமமுகவினர் விளக்கம் அளித்துள்ளனர். 
 
மேலும் ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து கொண்டே இன்னொரு கட்சிக்கு உரிமை கொண்டாட முடியாது என்பதால் இந்த மாற்றம் நடந்துள்ளதாகவும், கடந்த பல வருடங்களாக மாற்றுக்கட்சியில் இருந்து கொண்டு திமுகவை வசைபாடிய நாஞ்சில் சம்பத் தற்போது திமுகவுக்கு திடீரென மாறியதால் அவருக்கு தினகரனின் ராஜதந்திரம் தெரிய வாய்ப்பில்லை என்றும் அமமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.