வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 24 ஏப்ரல் 2019 (08:41 IST)

எட்டு வேட்பாளர்களை ஏமாற்றினாரா டிடிவி தினகரன்!

கடந்த 18ஆம் தேதி மக்களவை தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே. மக்களை பொருத்தவரையில் மக்களவை தேர்தலில் அதிக கவனம் இருந்தாலும் தமிழக அரசியல் கட்சிகளின் கவனம் இடைத்தேர்தலில் மட்டுமே இருந்தது. ஆட்சியை தக்க வைத்து கொள்ள அதிமுகவும், உண்மையான அதிமுக தாங்கள் தான் என்பதை அமமுக நிரூபிக்கவும், ஆட்சி மாற்றத்திற்காக திமுகவும் இந்த 18 தொகுதி இடைத்தேர்தலை சந்தித்தன
 
இந்த நிலையில் அமமுக வேட்பாளர்களில் 18 பேர்களில் பத்து பேர்களுக்கு மட்டுமே கட்சித்தலைமை அதிக செலவு செய்ததாகவும், எட்டு வேட்பாளர்களை கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. தேர்தல் செலவில் வேட்பாளர் பாதி, கட்சி பாதி சமமாக செலவு செய்ய வேண்டும் என்று போட்ட ஒப்பந்தத்தின்படி எட்டு வேட்பாளர்களுக்கு மட்டும் கட்சி கொடுப்பதாக கூறிய பணம் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அந்த எட்டு வேட்பாளர்களும் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது
 
ஆனால் வரும் 19ஆம் தேதி நடைபெறும் நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஜாக்பாட் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களுடைய தேர்தல் செலவு முழுவதையும் டிடிவி தினகரனே ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த இடைத்தேர்தல் அமமுகவை பொருத்தவரை ஒரு மானப்பிரச்சனை என்பதும் இந்த தேர்தலின் முடிவை பொருத்துதான் அக்கட்சியின் எதிர்காலம் உள்ளது என்பதால் டிடிவி தினகரன் இந்த தேர்தலுக்காக பணத்தை வாரியிறைத்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன