அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு

Last Modified புதன், 24 ஏப்ரல் 2019 (20:06 IST)
டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு சமிபத்தில் நடந்த 38 தொகுதி மக்களவை மற்றும் 18 தொகுதிகள் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியது. இந்த சின்னத்தை டிடிவி தினகரன் நீண்ட சட்டப்போராட்டம் நடத்தி நீதிமன்றம் வரை சென்று பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வரும் மே 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கும் பரிசுப்பெட்டி சின்னத்தை தனது கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று டிடிவி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் தேர்தல் ஆணையத்திடம் இருந்து எந்தவித பதிலும் வராததால் இதுகுறித்து அவர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தார்.

election
இந்த நிலையில் சற்றுமுன் அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனால் அமமுகவினர் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த தேர்தல் அமமுகவுக்கு வாழ்வா? சாவா? என்ற நிலை உள்ளதால் அதிமுகவை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :