1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (09:09 IST)

திராவிட இயக்கம் இல்லாமல் இருந்திருந்தால் 10 மடங்கு தமிழகம் மேலே சென்று இருக்கும்: அண்ணாமலை

திராவிட இயக்க மட்டும் இல்லாமல் இருந்தால் தமிழகம் இப்போது உள்ளதை விட 10 மடங்கு உயர்ந்திருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது என் மண் என் மக்கள் என்ற நடைபயணத்தை செய்து வருகிறார் என்பதும் இந்த நடைபயணத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் ஒட்டப்பிடாரம் அருகே புதியமுத்தூர் என்ற பகுதியில் நடைப்பயணத்தின் போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசினார். தமிழகத்துக்கு மட்டும் 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கி உள்ளது என்று தெரிவித்தார். 
 
திராவிட இயக்கம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் பத்து மடங்கு தமிழகம் மேலே சென்று இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அண்ணாமலையின் இந்த கருத்துக்கு திராவிட இயக்க தலைவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran