வேலூர் தேர்தல்: ஏசி சண்முகம் முன்னிலை

Last Modified வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (08:37 IST)
வேலூர் மக்களவை இடைத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியது.
முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலை வகித்து வருகிறார். அதேபோல் அடுத்த கட்டமாக மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதிலும் முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது

சற்றுமுன் வெளியான தகவலின்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் அவர்கள் 4,406 வாக்குகளும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்கள் 3994வாக்குகளும் பெற்று உள்ளார். நாம் தமிழர் வேட்பாளருக்கு 400 வாக்குகள் கிடைத்துள்ளது. எனவே முதல் சுற்றில் ஏசி சண்முகம் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் தேனி தவிர அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் பின்னணியில் இருப்பது அக்கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த தேர்தலின் இறுதி முடிவு வரும் வரை பொறுமை காப்போம்இதில் மேலும் படிக்கவும் :