வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 4 பிப்ரவரி 2021 (07:15 IST)

அதிமுக அலுவலகத்தையும் மூடுவார்களா? நமது எம்ஜிஆர் நாளேடு கேள்வி!

சசிகலா வருகிறார் என்றதும் ஜெயலலிதா சமாதி மூடுபவர்கள் அதிமுக அலுவலகம் வருகிறார் என்றால் அந்த அலுவலகத்தையும் விடுவார்களா என அமமுக அதிகாரபூர்வ நாடான நமது எம்ஜிஆர் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அவர்கள் சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான நிலையில் அவர் பிப்ரவரி 7ம் தேதி சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
சென்னை வந்ததும் முதல் வேலையாக அவர் ஜெயலலிதாவின் சமாதிக்கு செல்ல உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென நேற்று முதல் பணிகள் காரணமாக ஜெயலலிதாவின் சமாதி மூடப்படுவதாக விரைவில் பணிகள் முடிந்ததும் தொடங்கப்படும் என்றும் பொதுப்பணித் துறை அறிவித்திருந்தது 
 
இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் நமது எம்ஜிஆர் இது குறித்த கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளது. அதிமுக அலுவலகத்திற்கு சசிகலா வருகிறார் என்றால் சமாதியை மூடியது போல அதிமுக அலுவலகத்தையும் மூடுவார்களா? என அந்த நாளேடு கேள்வி எழுப்பியுள்ளது 
 
அவ்வளவு பயம் வந்து ஆட்டிப்படைக்கிறது என்றால் எவ்வளவு நடுங்குகிறார்கள் என்று மக்களுக்கு புரியும் என்றும் சின்னம்மா வந்தால் அம்மாவின் சமாதியை மூடும் அவர்கள் நாளை சின்னம்மா தலைமை கழகம் செல்லும் செய்தி கிடைத்தால் தலைமையும் மூடுவார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது