திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 11 நவம்பர் 2017 (22:28 IST)

கருணாநிதியை சந்தித்தார் நல்லக்கண்ணு: அடையாளம் தெரிந்து கொண்டதாக தகவல்

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மு.க.ஸ்டாலின் மற்றும்  முத்தரசன் ஆகியோர் உடனிருந்தனர்.


 


கருணாநிதியின் கோபாலபுர இல்லத்தில் நடந்த இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நல்லக்கண்ணு கூறியதாவது:  `கருணாநிதியை சந்தித்ததில் மகிழ்ச்சி, அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி என்னை அடையாளம் கண்டுகொண்டு சிரித்தார்' என்று கூறினார்.

பிற கட்சியின் தலைவர்களை அடையாளம் காணும் அளவுக்கு கருணாநிதி தேறியுள்ளதால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.