1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 12 மார்ச் 2020 (20:30 IST)

ரஜினி ரசிகர்கள் ஏமாற்றமா? போங்கடா! ‘நான் சிரித்தால்’ பட இயக்குனரின் கருத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த ஒருசில கருத்துக்கள் ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் ஒருசிலர் இந்த கருத்தை வரவேற்றுள்ளனர். அந்த வகையில் ரஜினியின் இன்றைய பேச்சு குறித்து ரஜினியின் தீவிர ரசிகரும் ‘நான் சிரித்தால்’ பட இயக்குனருமான ரானா கூறியதாவது:
 
”ஒரு கனவு நிஜமாகிறது. தமிழ்நாட்டை பார்க்கணும்கற ஆசை தான், தலைவர் அரசியலுக்கு வரணும்கற எண்ணத்தையே கொடுத்தது. எத்தனையோ பேரு அரசியலுக்கு வந்திருக்காங்க. அவங்க மாதிரி கூட்டம் இருக்குனு நானும் அரசியலுக்கு வரேன்’ன்னு அவரு அரசியலுக்கு வந்து அவரும் ஒரு சாதாரண ஆட்சி தந்தா, அது தான் உண்மையான ரசிகனுக்கும், அவர் மேல அன்பு, நம்பிக்கை வைத்த மக்களுக்கும் ஏமாற்றமாக இருக்கும். நாங்க உங்கள் பின்னாடி நிற்கிறது ஒரே ஒரு எதிர்பார்ப்பு ஓட தான் தலைவா, இந்த நாடும் நாட்டு மக்களும் நல்ல இருக்கணும். அவங்க உங்களை வாழ்த்துறதை எங்க காதால கேட்டு பெருமைபடணும்.
 
முதலமைச்சர் பதவி என்ன தலைவா பிஸ்கோத்து. முதலமைச்சர் அப்படிங்கிற பதவிக்கே நீ உட்கார்ந்தா தான் தலைவா கெத்து. நீங்க சிங்கப்பூர்ல இருந்து எங்களுக்காகத் திரும்பி வந்ததே எங்களுக்கு சந்தோஷம். இப்போது படம் நடிச்சிட்டு இருக்கிறது அடுத்த சந்தோஷம், அரசியலுக்கு வர்றது அடுத்த சந்தோஷம், நல்லாட்சி தரப் போறது பெரிய சந்தோஷம். 'முதல்வன்' படத்தில் நீங்கள் நடிக்கவில்லைனு இன்றைக்கு வரைக்கும் பொலம்பிக்கிட்டு இருக்கிற ஊர் தலைவா. டக்குனு இந்த முடிவை ஏத்துக்க கஷ்டமாகத் தான் இருக்கும்.
 
ஆனா யோசிச்சு பார்த்தால் நம்ம லட்சியத்தை அடைய சொந்த விருப்பு வெறுப்புகளை தூக்கி போடணும்னு உணர முடியும். பொதுமக்களும், உங்கள் மீது உண்மையான அன்பும், நம்பிக்கையும் கொண்ட ரசிகர் படை இருக்கு தலைவா, வா தலைவா. இப்படி ஒரு தன்னலமற்ற தலைவன் என்று தலைமுறைகள் தாண்டி பேசப்படட்டும். ரஜினி ரசிகர்கள் ஏமாற்றமா? போங்கடா! பெருமைடா!”
 
இவ்வாறு ராணா தெரிவித்துள்ளார்.