வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 1 ஜூன் 2023 (07:37 IST)

சீமானின் ட்விட்டர் கணக்கு தடை: நாம் தமிழர் கட்சியின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கம்..!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் ட்விட்டர் பக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலருடைய ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் உள்ள பலருடைய ட்விட்டர் கணக்குகள் தடை செய்யப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சர்ச்சைக்குரிய வகையில் ட்விட் செய்பவர்களின் கணக்குகள் தடை செய்யப்பட்டு வருகின்றன. 
 
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த பலருடைய ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
சட்ட கோரிக்கைக்கு ஏற்ப ட்விட்டர் கணக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த தடைக்கு நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva