1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold Rates Skyrocket: Prices Surge for the Second Consecutive Day in Chennai

சென்னையில் ஆபரண தங்கம் விலை மீண்டும் உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Gold Rate Today Chennai
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
நேற்று ஒரே நாளில் காலை மற்றும் மாலை என இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்றும் அந்த உயர்வு தொடர்கிறது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.560 அதிகரித்து, ரூ.12,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
இதன் விளைவாக, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,02,640 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.   ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டி விற்பனையாவது நகை வாங்குவோரைத் திகைக்க வைத்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு வீழ்ச்சி போன்றவையே இந்த அதிரடி உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
 
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.271-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,71,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  
 
 
தங்கம் விலை நிலவரம், சென்னை தங்கம் விலை, சவரன் ஒரு லட்சம், வெள்ளி விலை உயர்வு, ஆபரணத் தங்கம், இன்றைய தங்கம் விலை, சென்னை செய்திகள், முதலீடு, பொருளாதார மாற்றம், தங்கம் விலை உயர்வு 2026
 
Edited by Mahendran
About Writer
Mahendran