சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த தாய்-மகன் கைது.. 4,200 போதை மாத்திரைகள் பறிமுதல்
சென்னையில் போதை மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்ச் சோதனையின்போது போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 4,200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் மீனா மற்றும் சீனு ஆகிய இருவரும் தாய் மற்றும் மகன் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து போதை மாத்திரைகளை சென்னைக்கு கடத்தி வந்து, இங்குள்ள இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதில் சீனு என்பவர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் 17 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தக் காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், குடும்பமாக சேர்ந்து இத்தகைய சட்டவிரோத செயலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செய்திகள், போதை மாத்திரைகள் பறிமுதல், போலீஸ் அதிரடி கைது, குற்றச் செய்திகள், சென்னை காவல்துறை, போதைப்பொருள் கடத்தல், தாய் மகன் கைது, மும்பை சென்னை கடத்தல், போதைப்பொருள் ஒழிப்பு, சட்டவிரோத விற்பனை
Edited by Mahendran