புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 27 ஜனவரி 2021 (23:42 IST)

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி திமுகவில் இணைந்தார் !

நாம் தமிழர் கட்சியில் சீமானின் நம்பிக்கைக்குரியவராக  இருந்த ராஜீவ் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அக்கட்சியிலிருந்து விலகினார். சீமான் அவர்களுக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் கட்சியிலிருந்து விலகி தாகவும் கூறப்பட்டது

இந்நிலையில், அவருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞராக இருந்து சமீபத்தில் விலகிய ராஜீவ்காந்தி அண்ணா அறிவாலயத்தில் இன்று  திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

ஏற்கனவே நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் ஒவ்வொரு முக்கியஸ்தர்களாக அக்கட்சியைவிடு விலகி திராவிட கட்சிகளில்சேர்ந்துவரும் நிலையில் இன்று சீமான், நாம் தமிழர் கட்சியைச்  234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடும் எனத் தெரிவித்து, திமுக, அதிமுக தனித்துப் போட்டியிடுமா எனச் சவால் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.