வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 14 ஆகஸ்ட் 2024 (14:56 IST)

மைலாப்பூர் இந்து நிரந்தர நிதி லிமிடெட் நிறுவன நிதி மோசடி வழக்கின் பின்னணி என்ன? போலீசார் அறிக்கை

மைலாப்பூர் இந்து நிரந்தர நிதி லிமிடெட்’ நிறுவன நிதி மோசடியில் தேவநாதன் யாதவ் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ள வழக்கின் பின்னணி, கைதுக்கான காரணம் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
சென்னை மைலாப்பூரில் 150 ஆண்டுகளாக இயங்கி வந்த Mylapore Hindu Permanent Fund Nidhi Limited என்ற நிறுவனத்தின் மீது மனுதாரர் திரு. பிரசாத், வயது 52, த/பெ. கோபால், காந்திநகர், அடையார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்ததில் Mylapore Hindu Permanent Fund Nidhi Limited என்ற நிறுவனம் (A1) மற்றும் நிர்வாக இயக்குனர் எதிரி (A2) தேவநாதன் யாதவ், இயக்குனர்களான எதிரி (A3) குனசீலன், (A4) சாலமன் மோகன்தாஸ், எதிரி (A5) மகிமைநாதன் என்பவர்கள் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பியமனுதாரர் கடந்த 2021 முதல் 2024 வரை உள்ள இடைப்பட்ட நாட்களில் நிறுவனத்தின் உள்ள பல்வேறு திட்டங்களான Fixed Deposit, Recurring Deposit, Schemes and Cumulative schemes போன்றவற்றில் ரூ. 46,49,180/- த்தினை முதலீடு செய்து முதிர்ச்சி அடைந்த பிறகும் பணத்தினை திருப்பித்தரவில்லை என்ற காரணத்தால் சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த நிறுவனம் கடந்த 1872 ஆண்டு முதல் இயங்கிவருகிறது. அதில் (A2) தேவநாதன் யாதவ் என்பவர் 2017 ம் ஆண்டு முதல் நிர்வாக இயக்குனராக நிர்வாகித்துவருகிறார்.
 
மனுதாரர் கொடுத்த புகாரில் மேற்படி நிறுவனம் பல கவர்ச்சிகரமான திட்டங்களில் Fixed Deposit, Recurring Deposit, Schemes and Cumulative schemes மற்றும் ஓய்வுதிய திட்டம் என்ற பெயரில் முதியோர் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான சிறப்பான திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 8% முதல் 12% வரை வட்டி தருவதாக கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை அளித்து பண முதலீட்டு தொகை முதிர்வு பெற்ற பிறகும் பணத்தினை திரும்பதரவில்லை. மேற்கண்ட நிறுவனம் 144 முதலீட்டாளர்களிடம் ரூபாய் 24.5 கோடி பணத்தை பெற்று ஏமாற்றியதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு குற்ற எண். 14/2024u/s. 409, 420 r/w 34 IPC, Sec. 22 of BUDS Act, 2019 and Sec. 5 of TNPID Act, 1997 என்ற பிரிவுகளின் கீழ் Mylapore Hindu Permanent Fund Nidhi Limited, அதன் நிர்வாக இயக்குநர், மற்றும் 4 இயக்கநர்களுக்கு எதிராக 12.08.2024 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
உரிய புலன் விசாரனைக்குப் பிறகு காவல் கண்காணிப்பாளர் திரு. ஜோஸ் தங்கைய்யா, அவர்களின் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு 13.08.2024 அன்று மேற்படி நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எதிரி (A2) தேவநாதன் யாதவ் (WIN TV Chairman) என்பவரை புதுக்கோட்டை மாவட்டத்திலும், இயக்குநர்கள் எதிரி (A3) குனசீலன் (Win TV Reporter), ஏதிரி (A5) மகிமைநாதன் (Win TV Senior Camera Man ) என்பவர்களை சென்னையிலும் கைது செய்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
 
Edited by Siva