1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 8 அக்டோபர் 2019 (15:55 IST)

எகிறிய விக்கெட்: தினகரனுக்கான மெட்டு கட்டி டியூன் போட ஆளில்லை!!

டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்து விலகி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் தினா. 
 
திமுக, அதிமுக ஆகியக் கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட அமமுக, மக்களவை மற்றும் இடைத்தேர்தல் தோல்விகளால் துவண்டு போயுள்ளது. இதனால் அமமுக அரசியல் ரீதியாக நெருக்கடியில் உள்ளது.  
 
இது ஒரு பக்கம் இருக்க ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒவ்வொரு சின்னம் வழங்கப்படுவதால் கட்சியை மக்களிடையே கொண்டு சேர்ப்பதிலும், வெற்றி பெறுவதிலும் சிரமங்கள் சந்தித்து வருகிறார் தினகரன். இதற்காகவே இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியும் உள்ளார். 
 
நிலைமை இப்படி இருக்க, ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் டிடிவி தினகரனை தலைமையாக ஏற்றுக்கொண்ட இசையமைப்பாளர் தினா தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். அமமுக பிரச்சாரப் பாடல்களை இசையமைத்து கொடுத்த இவர் தற்போது பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் இணைந்து, பாஜக அடிப்படை உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டார்.