1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 4 அக்டோபர் 2019 (17:31 IST)

குடும்பத்தாரை கட்சிக்குள் விட்ட தினகரன்: ஏன் இந்த திடீர் மாற்றம்?

அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் தனது மைத்துனரின் மாமனாருக்கு கட்சியில் முக்கிய பதவியை வழங்கியுள்ளாராம். 
 
திமுக, அதிமுக ஆகியக் கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட அமமுக, மக்களவை மற்றும் இடைத்தேர்தல் தோல்விகளால் துவண்டு போயுள்ளது. இதனால் அமமுக அரசியல் ரீதியாக நெருக்கடியில் உள்ளது. 
 
இது ஒரு பக்கம் இருக்க ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒவ்வொரு சின்னம் வழங்கப்படுவதால் கட்சியை மக்களிடையே கொண்டு சேர்ப்பதிலும், வெற்றி பெறுவதிலும் சிரமங்கள் சந்தித்து வருகிறார் தினகரன். இதற்காகவே இடைத்தேர்தலில் போட்ட்யிடாமல் ஒதுங்கியும் உள்ளார். 
 
இந்நிலையில், அமமுக அமைப்புச் செயலாளராக பண்ணைவயல் பாஸ்கரனை புதிதாக நியமித்துள்ளார் டிடிவி தினகரன். பண்ணைவயல் பாஸ்கரன் டிடிவி தினகரனின் மைத்துனரான டாக்டர் வெங்கடேஷின் மாமனார்.
 
பட்டுக்கோட்டையை சேர்ந்த இவர் தனது மருமகன் வெங்கடேஷ் மூலம் இந்தப் பதவியை பெற்றதாக கூறப்படுகிறது. கட்சியில் குடும்ப உறுப்பினர்களோ, நெருங்கிய உறவினர்களோ யாரையும் சேர்க்காமல் இருந்த தினகரன் முதல்முறையாக உறவினர் ஒருவருக்கு கட்சியில் பதவியை கொடுத்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதேசமயம் எந்த நோக்கத்துடன் தினகரன் இந்த முடிவை எடுத்தார் என்பதும் தெரியாத நிலையில் போக போக பண்ணைவயல் பாஸ்கரனின் செயல்பாடுகளை வைத்து இதை புரிந்துக்கொள்ளாம் என தெரிகிறது.