செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2020 (14:28 IST)

அடுத்து தமிழகத்தில் பாஜகவின் சர்க்கார்தான்! – எச்.ராஜா நம்பிக்கை!

அடுத்த சட்டமன்ற தேர்தலின் மூலம் பாஜக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என எச்.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து மக்களுக்கு புரிய செய்ய மாநில பாஜகவினர் பல இடங்களில் குடியுரிமை சட்ட விளக்க விழிப்புணர்வு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியக்குளம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார்.

அப்போது அவர் ”குடியுரிமை மசோதாவால் யாரையும் வெளியேற்ற போவதில்லை. 11 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் வாழ்வோருக்கு இந்த சட்டத்தால் எந்த பிரச்சினையும் இல்லை. புதிதாக வரும் மற்றவர்களுக்காகதான் இந்த மசோதா செயல்படுத்தப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏற்கனவே இந்த சட்டம் மூன்று முறை திருத்தி அமைக்கப்பட்டதாகவும், பாஜக அரசு மக்கள் நலனுக்காக ஒரேயொரு முறை திருத்தியுள்ளதாகவும் கூறியுள்ள அவர் அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் கண்டிப்பாக ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.