திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 6 ஜூலை 2019 (21:28 IST)

முகிலன் உயிருடன் இருக்கிறார் : நேரில் பார்த்ததாக நண்பர் தகவல்

கடந்த பிப்ரவரி மாதம் எழும்பூர் ரயில் நிலையம் சென்ற சமூக செயற்பாட்டாளர் முகிலனை  காணவில்லை என்று தமிழகத்தில் பரவலாகப்பேசப்பட்டது. இதனைத்தொடர்ந்து முகிலன் காணாமல் போனது தொடர்பாக தமிழக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பல மாதங்களாக தமிழக  போலீஸார் முகிலனைத் தேடிவந்த நிலையில் இன்று ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதில் முகிலனைப் பார்த்ததாக அவரது நண்பர் சண்முகன் என்பவர் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது :
 
ட்ஆந்திர மாநில காவல்துறையின் பிடியில் முகிலன் இருப்பதாகத் தெரிகிறது. திருப்பதி ரயில்நிலையத்தில் முதல் நடைமேடையில் அவரை நேரில்  பார்த்தேன். காவல்துறையின்  பாதுகாப்பில் அவரைக் கொண்டுசெல்லப்பட்டதைப் பார்த்தேன். முகத்தில் தாயுடன் கோஷ்மிட்டபடி சென்றார்.ஆனால் அவருடன் பேச முடியவில்லை. முகிலனை நேரில் பார்த்ததும் அதை அவரது மனைவியிடம் கூறினேன்.இவ்வாறு தெரிவித்தார்.