புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 ஜூன் 2019 (14:12 IST)

ஆசை வார்த்தை கூறி காதலியுடன் உல்லாசம் : காதலன் எடுத்த திடீர் முடிவு !

ஈரோடு மாவட்டம் முனிசிபல் சத்திரம் பகுதியில் வசிப்பவர் பார்த்திபன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்ணை 5 வருடமாகக் காதலித்து வந்தார். அவர்கள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் அதிக நெருக்கம் காட்டி உல்லாசம் அனுபவித்ததாகத் தெரிகிறது. 
இதனால் ஜோதி கர்ப்பமானார். இதனால் பயப்பட்ட ஜோதி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலன் பார்த்திபனை கேட்டுள்ளார்.
 
அதற்கு பார்த்திபன் மறுத்துள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த ஜோதி,  நடந்த விஷயம் பற்றி தன் குடும்பத்தினருக்குத் தெரிவித்தார். ஜோதியின் குடும்பத்தினர் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி காவல்நிலையத்திக்  புகார் அளித்தனர்.
 
இதனையடுத்து, காவல்துறையினர் பார்த்திபன் - ஜோதி வீட்டாரை அழைத்து பேசினர். அதனடிப்படையில்  ஜோதியை பார்த்திபன் திருமண செய்துகொள்ள சம்மதித்தார். இதனையடுத்து கோவிலில் வைத்து பார்த்திபன் - ஜோதி இருவரும் மாலை மாற்றி திருமணம், செய்து கொண்டனர்.  இந்த சம்பவத்தால் முதலில் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், பின்னர் பார்த்திபனின் செயலைப் பாராட்டியதாகத் தகவல்கள் வெளியாகிறது.