செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஜூலை 2019 (08:55 IST)

140 நாட்கள் எங்கிருந்தீர்கள். சிபிசிஐடி போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் முகிலன்

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை சென்னையில் பத்திரிகையாளர்கள் தெரிவித்த சமூக சேவகர் முகிலன் பின்னர் திடீரென எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காணாமல் போனார். கடந்த பிப்ரவரி மாதம் காணாமல் போன அவரை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிர முயற்சியில் இருந்த நிலையில் நேற்று அவர் ஆந்திர மாநிலம் திருப்பதி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.
 
இதனையடுத்து ஆட்கொணர்வு மனு வழக்கு நடைபெற்று வரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த முகிலன் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார். இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் முகிலனை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். முகிலன் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்று திடீர் போராளிகள் டுவிட்டரில் கதையளந்த நிலையில் உண்மையில் அவருக்கு என்ன ஆனது? அவராக ஓடி ஒளிந்தாரா? அல்லது கடத்தப்பட்டாரா? என்பது விசாரணையின் முடிவில்தான் தெரிய வரும்
 
இந்த நிலையில் ஆந்திர போலீசார், தமிழக போலீசாரிடம் முகிலனை ஒப்படைத்தபோது அவர் தமிழக போலீசாரின் வாகனத்தில் ஏற மறுத்தார். ஆனால் அவரை வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் போலீசார் ஏற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.