1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 25 அக்டோபர் 2018 (20:25 IST)

'மீடூ' வால் நீக்கப்பட்ட இசைக்கலைஞர்கள்...

மீடூ விவகாரம் நாடு முழுவதும் பூதாகரமாக கிளம்பியுள்ளதால் மார்கழி மாதம் நடைபெறவிருக்கும்  இசைகச்சேரியில் மிருந்து 7 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி திரைத்துறையினர் பெண்கள் தங்கள் வாழ்வில் நடந்த பாதிப்புகளை பதிவிட்டு வருகின்றனர்.குறிப்பாக வைரமுத்து,சுசிகணேசன் போன்றோர் இந்த புகாருக்கு ஆளகியுள்ளனர்.
இதனையடுத்து கர்நாடக இசைச்சங்கத்தின் முன்னனி இசைக்கலைஞர்கள் மீது பாலியல் புகார் எழுந்ததை அடுத்து பெரும் சர்ச்சை எழுந்தது.
 
இந்நிலையில் இந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஓ.எசஸ்.தியாகராஜன்,மன்னார்குடி ஈஸ்வரன்,ஸ்ரீமுஸ்ணம் ராஜாராவ் ,ரமேஷ்,திருவாரூர் வத்தியநாதன்,,ரவிகிரான் ஆகியோர் உலக புகழ்பெற்ற மெட்ராஸ் இசை அகாடமியால் நடத்தப்படும் மார்கழி இசைக்கச்சேரியில் இருந்து நிராகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.