பேஸ்புக்கில் இருந்து நீக்கப்படும் டிரென்டிங் செக்ஷென்!
பேஸ்புக் தளத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிரென்டிங் செக்ஷென் கொண்டுவரப்பட்டது. தற்போது இந்த டிரென்டிங் செக்ஷெனை அகற்றுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பேஸ்புக்கில் அதிக டிரென்டிங் ஆகும் தலைப்புகளை அதன் பயனர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் இந்த டிரென்டிங் செக்ஷென் சேர்க்கப்பட்டது. இதற்கு வெறும் 1.5% க்ளிக்களை மட்டுமே வருவதால் இது பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட உள்ளதாம்.
தற்போது, இந்தியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 80 செய்தி நிறுவனங்களை கொண்டு பிரேக்கிங் நியூஸ் லேபெல் ஆப்ஷனை பேஸ்புக் சோதனை செய்து வருகிறது.
டிரென்டிங்கிற்கு பதிலாக பேஸ்புக் செயலியின் ஈவென்ட்ஸ் பகுதியில் டுடே இன் லோக்கல் நியூஸ் எனும் அம்சம் பிரத்யேகமாக வழங்க பேஸ்புக் பணியாற்றி வருகிறதாம். மேலும், டிரென்டிங் செக்ஷென் அடுத்த வாரத்தோடு நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.