ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 9 மார்ச் 2024 (22:53 IST)

போதைப்பொருள் கடத்தல் வழியாக வந்த பணத்தில்....ஜாபர் சாதிக் பரபரப்பு வாக்குமூலம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை வைத்து, புரசைவாக்கத்தில் ஓட்டல், மங்கை உள்ளிட்ட தயாரித்ததாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார்.

போதைப் பொருள் வழக்கில் கைதான திமுக முன்னாள் நிர்வாகி சாதிக்கை டெல்லி பாட்டியாலயா  நீதிமன்றத்தில் போதைப் பொருள்தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
 
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்ற டெல்லி பாட்டியாலயா  ஹவுஸ் நீதிமன்றம் ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க   அனுமதி அளித்தது.
 
எனவே ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் என்.சி.பி காவல் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இந்த விசாரணையின்போது பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படும் நிலையில், கடந்த 17 ஆம் தேதி முதல் தலைமறைவான ஜாபர் சாதிக், 5க்கும் மேற்பட்ட மொபைல் போன்களை மாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும், கடந்தாண்டு  மட்டும் 45 முறை போதைப்பொருளை கடத்தியதாகவும், அதன் மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி என போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை வைத்து, புரசைவாக்கத்தில் ஓட்டல், மங்கை உள்ளிட்ட தயாரித்ததாக ஜாப சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
இவ்வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
மேலும், கடத்தலில் வந்த பணத்தின் மூலமாக பயன் அடைந்தவர்கள் பட்டியலை தனித்தனியாக விசாரணை செய்யவும் போதைப்பொருள் அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.