வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 4 டிசம்பர் 2018 (21:03 IST)

கள்ளக் கணவருடன் மோதல்: குழந்தையை கயிற்றி இறுக்கி கொன்ற தாய்

கரூர் அருகே குடும்ப பிரச்சினைக்காக 3 வயது குழந்தையை கயிற்றால் இறுக்கி கொன்ற கொடூர தாய் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை அடுத்த பரளி என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் ரம்யா வயது 24. இவரது மகள் வேத வர்ஷினி வயது 3. 
 
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக திருச்சி மாவட்டம் கொளக்குடி பகுதியை சேர்ந்த தங்கதுரை என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா தனது கள்ளக்காதலன் மணிமாறன் உடன் தொடர்பில் இருந்ததால் கணவனை வெறுத்து மணிமாறன் உடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் வேதா வர்சினி. 
 
ரம்யாவுக்கும் மணிமாறனுக்கு ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் மனமுடைந்த ரம்யா இன்று தனது மகள் வேதா வர்சினியை கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார். மேலும் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 
 
இச்சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர் ரம்யாவை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பெற்ற தாயே குழந்தையை கொன்ற விபரீதம் இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.