திடீரென பழுதான பாம்பன் பாலம்: ரயில்கள் ரத்தானதால் பயணிகள் அதிருப்தி
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம் இன்று மாலை திடீரென பழுதானது. இதன் காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய நெல்லை விரைவு ரயிலும், சேது விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து ராஜஸ்தான் செல்லும் அஜ்மீர் விரைவு ரயில் இரவு 10.15க்கு புறப்படுவதற்கு பதிலாக நாளை காலை 7.15க்கு புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அஜ்மீர் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இரவு முழுவதும் பயணிகள் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பழுதான பாம்பன் ரயில் பாலத்தை பழுதுநீக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதாகவும், இன்று இரவுக்குள் பழுது சரிசெய்யபப்டும் என்றும் ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன