வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (13:29 IST)

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

கடன் தொல்லை காரணமாக மூன்று மகன்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்ய முயன்ற தாய் உள்பட நான்கு பேரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
தென்காசி மாவட்டத்தில், குழந்தைவேலு - உச்சிமாகாளி என்ற தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை குழந்தைவேலு வேலைக்கு சென்ற போது, உச்சிமாகாளி தனது மூன்று மகன்களுக்கு விஷம் கொடுத்து, தானும் விஷத்தை குடித்துள்ளார்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக நான்கு பேரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில், குழந்தைவேலு குடும்பத்தினருக்கு கடன் தொல்லை அதிகம் இருப்பதாகவும், கடன்காரர்கள் நெருக்குதல் கொடுப்பதால் வாழ்க்கையில் வெறுப்படைந்த உச்சிமாகாளி தனது மகன்களுக்கு விஷம் கொடுத்து தானும் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிய வருகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran