ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 16 செப்டம்பர் 2024 (09:39 IST)

புதுச்சேரி சிறுமி வன்கொடுமை குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை!

புதுச்சேரியில் சிறுமியை கடத்தி வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி சிறைக்குள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கடந்த மார்ச் மாதம் புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமி மாயமான நிலையில் சில நாட்கள் கழித்து அங்குள்ள கால்வாயில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்த விசாரணையில் சிறுமி கடத்தி செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்து தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்த வழக்கில் விவேகானந்தன் (57), கருணாஸ் (19) என்ற இருவரை போலீஸார் கைது செய்த நிலையில் அவர்கள் காலாட்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சிறையில் கழிவறைக்கு சென்ற விவேகானந்தன் அங்கு துண்டை வைத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீஸார் விவேகானந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K