வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2023 (12:00 IST)

பிரபாகரன் மகள் வீடியோ வைரல்.. உண்மையா? ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதா?

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரில் கொல்லப்பட்ட நிலையில் அவருடைய மனைவி மற்றும் மகள் வெளிநாட்டுக்கு தப்பித்து விட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் இந்த செய்தி உறுதிப்படுத்தவில்லை.

அவ்வப்போது ஈழத்தமிழர்களும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவருடைய மனைவி மற்றும் மகளும் உயிரோடு இருப்பதாக கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பிரபாகரன் பிறந்த நாளான நவம்பர் 27ஆம் தேதி திடீரென பிரபாகரன் மகள் என்று கூறப்படும் துவாரகா வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோவை பார்த்த ஈழ தமிழர்கள் பிரபாகரன் மகள் உயிரோடு இருப்பதாக எண்ணி வருகின்றனர்.

ஆனால் இந்த வீடியோ ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்றும் உண்மையான வீடியோ அல்ல என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர் எது உண்மை என்பது போக போக தான் தெரியவரும்.


Edited by Mahendran