ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்: இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
மணல் குவாரி வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நிலையில் இந்த சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
பத்து மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மணல் குவாரி வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு சம்மன் ன் அனுப்புவதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் மனுவுக்கு விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மூன்று வார அவகாசம் அளித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran