1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2023 (14:43 IST)

பேருந்து சக்கரத்தில் சிக்கி மகன் கண் முன்னே தாய் பலி

Chennai
சென்னை –ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில், பேருந்து சக்கரத்தில் சிக்கி மகன் கண் முன்னே தாய் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்துள்ள  துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா(42). இவர், உடல்  நலக்குறைவால், தன்  மகன் பார்த்திபனுடன் கே.கே. நகரிலுள்ள மருத்துவமனைக்கு இன்று பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

ஆலந்தூர் ஆசர்கானா அருகே வளைவு பகுதியில் திரும்பும்போது, கோவையிலிருந்து வந்த ஒரு அரசு விரைவுப் பேருந்து பைக் மீது மோதியது.

இதில், பார்த்திபன், அவரது தாய் ஜெயா இருவரும் பைக்கிலிருந்து கீழே விழுந்தனர். அப்போது, ஜெயா மீது மாநகர பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது.

பேருந்து சக்கரத்தில் சிக்கிய ஜெயா, மகன் பார்திபன் கண் முன்னே தலை நசுங்கி பலியானார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.