வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (20:11 IST)

காவிரியில் 2.40 லட்சம் கனஅடி வர வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

flood
கடந்த சில நாட்களாக தமிழக கர்நாடக பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது 
 
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிப்பவர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் காவிரியில் 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் வர வாய்ப்பிருப்பதாகவும் சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இதனை அடுத்து காவிரி கரையோரம் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். நாளுக்கு நாள் காவிரியில் வரும் தண்ணீர் அளவை அதிகரித்து வருவது காவிரி கரையோரம் இருக்கும் மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது