திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (11:29 IST)

குரூப் 1 தேர்வுக்கு 3.16 லட்சம் பேர் விண்ணப்பம். டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

tnpsc
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு 3.16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 
 
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பிரிவில் 92 காலி பணியிடங்களுக்கு சமீபத்தில் விண்ணப்பம் வரவேற்கப்பட்டது. 92 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 672 பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது 
 
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 20 முதல் 23ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இந்த தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. வெறும் 92 பணிகளுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது