1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (18:06 IST)

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் எப்போது? தேர்வுத்துறை அறிவிப்பு!

result
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
 
 பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்பட்டது என்பது தெரிந்ததே 
 
இந்த தேர்வு எழுதியவர்கள் முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் தற்போது நாளை மதியம் 3 மணிக்கு பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது 
 
இந்த தேர்வு முடிவுகளை தமிழக அரசின் தேர்வுத்துறை இணையதளத்தில் பார்க்கலாம் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
பத்தாம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளதை அடுத்து மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.