தமிழை அடுத்து ஆங்கிலம்.. பொதுத்தேர்வு எழுத வராத 12,000 மாணவர்கள்..
சமீபத்தில் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பமான நிலையில் தமிழ் முதல் தாள் தேர்வு எழுத ஆயிரக்கணக்கான மாணவர்கள் வரவில்லை என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழை அடுத்து ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எழுதவும் பல மாணவர்கள் வரவில்லை என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தமிழகம் முழுவதும் பிளஸ் டூ தேர்வு மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கிய நிலையில் தமிழ் முதல் தேர்வு எழுத மார்ச் ஒன்றாம் தேதி 12,364 மாணவர்கள் வரவில்லை என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது. இதனையடுத்து நேற்று 12ஆம் வகுப்பு ஆங்கில தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வையும் 12,696 மாணவர்கள் எழுதவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது
தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கூறிய போதிலும் தேர்வு பயம் காரணமாகவும் தமிழ் ஆங்கிலம் பாடங்கள் மீது விருப்பம் இல்லாமல் பலர் தேர்வு எழுத வரவில்லை என்று கூறப்படுகிறது
இதனை அடுத்து மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Edited by Siva