திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 6 மார்ச் 2024 (08:19 IST)

சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விண்ணப்பிப்பதில் சிக்கல்! என்ன நடந்தது?

upsc
சிவில் சர்வீஸ் தேர்வுகளை யுபிஎஸ்இ நடத்தி வரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி முதல் நிலை தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது என்பதும் இந்த அறிவிப்பில் முதல் நிலை தேர்வுக்கு மார்ச் ஐந்தாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் விண்ணப்பித்த போது பல மணி நேரங்களாக சர்வர் முடங்கி இருந்ததாகவும் இதனால் இந்த தேர்வுக்கு விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியவில்லை என்றும் பலர் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளனர்

இதன் காரணமாக விண்ணப்ப தேதி நீட்டிக்கப்படுமா என்று இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அது குறித்து அறிவிப்பு எதையும் யுபிஎஸ்இ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான முதல் நிலை தேர்வு வரும் மே 26 ஆம் தேதி நடைபெற உள்ளதாக யுபிஎஸ்இ தெரிவித்துள்ளது

Edited by Siva