வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 6 மார்ச் 2024 (08:42 IST)

தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப் புரட்சி.. முதல்வர் ஸ்டாலின் பதிவு..!

MK Stalin
இன்று மார்ச் 6ஆம் தேதி முதல் முறையாக திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற தினம் என்பதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஒரு அமைதி புரட்சி ஏற்படுத்திய நாள் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

மார்ச் 6!

இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்!

பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள்!

அன்று தமிழ்நாட்டைக் காத்தோம்! இன்று மொத்த #INDIA-வின் கூட்டாட்சித்தன்மையையும் பன்முகத்தன்மையையும் மதச்சார்பின்மையையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை நம் தோள்களில் சுமக்கும் அளவுக்கு நம் வலிமை கூடியுள்ளது.

மீண்டும் வரலாறு படைப்போம்! நாட்டைக் காப்போம்!

Edited by Siva