1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 6 மார்ச் 2024 (07:35 IST)

விஜய் மகன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கப் போவது இவர்தானா?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது மகன் சஞ்சய். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த  நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் சஞ்சய் லைகா நிறுவனத்துக்காக படம் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் இளம் நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜை சென்னையில் ரகசியமாக நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பூஜையில் சஞ்சய்யின் தந்தை விஜய் கூட கலந்துகொள்ளவில்லை.

இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க கவின், துல்கர் சல்மான் என பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இப்போது இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கப் போவது துருவ் விக்ரம்தான் என்று சொல்லப்படுகிறது. அதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.