திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (15:04 IST)

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: 8 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டிய வெப்பம்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தும் நிலையில் இன்று 8 மாவட்டங்களில் 100 டிகிரியை வெப்பம் தாண்டி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் கோடை வெயில் ஆரம்பிக்கும் என்ற நிலையில் மார்ச் மாதமே கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது
 
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே கோவை , தர்மபுரி ஈரோடு மதுரை நாமக்கல் சேலம் திருச்சி வேலூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 103 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கோடிஅக்கு முன்பே வெப்பம் வாட்டி வருவதை அடுத்து ஏப்ரல் மே மாதங்களில் தமிழக மக்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது