கோடைக்காலத்தில் இயற்கையான முறையில் சருமத்தை பராமரிக்க சில வழிகள் !!
கோடைக்காலத்தில் இயற்கையான முறையில் சருமத்தை சரிசெய்ய பல வழிகள் இருக்கின்றன.
இயற்கை பொருட்களான தேன் மற்றும் தயிர் இரண்டும் வெயிலிலிருந்து சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. அதேபோல் பாலாடையில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து முகத்திற்கு பூசி வந்தால் முகம் பளபளப்பை பெரும்.
ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் தேன் இரண்டையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். ஒரு 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் கழுவவும்.
தேன் மற்றும் தயிர் இரண்டும் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்கிறது. இதனைச் செய்யும்போது வறண்ட சருமம் பளிச்சென்று ஆகிவிடும். மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும், அழுக்குகளையும் மற்றும் இறந்த செல்களை நீக்கி பொலிவு பெறச் செய்கிறது.
முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணெய்யில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பில் தடவி. பாசிப்பருப்பு மாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கி அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.