தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதமடித்த வெயில்!
இந்த ஆண்டு கோடை வெயில் முன்கூட்டியே தொடங்கிய நிலையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடும் வெயில் கொளுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அவ்வப்போது சில நேரங்களில் மழை பெய்தாலும் பெரும்பாலான நேரங்களில் வெயில் உக்கிரமாக இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதியில் உள்ளனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளது
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
திருப்பத்தூர், தஞ்சாவூர், பாளையங்கோட்டை, நாமக்கல், மதுரை, கரூர், ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளில் 100 டிகிரி அளவில் வெயில் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva