வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 மார்ச் 2023 (19:39 IST)

தமிழகத்தில் சதம் அடித்த வெயில்: கோடையால் மக்கள் அவதி..!

தமிழகத்தில் உள்ள ஐந்து நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்ததை அடுத்து பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர். கோடை மற்றும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு இன்னும் பல நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள பல நகரங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் அடித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர் 
 
இந்த வருடம் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் கோடை வெயிலின் கொடுமை காரணமாக பொதுமக்கள் வதைக்கபடுவார்கள் என கூறப்படுகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் இரண்டு மாதம் இருக்கும் நிலையில் இப்போதே தமிழகத்தின் பல பகுதிகளில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது. 
 
தமிழகத்தில் ஐந்து நகரங்களில் 100 டிகிரி தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு கரூர் மதுரை திருச்சி ஆகிய பகுதிகளில் 100 டிகிரி தாண்டி வெயில் சதம் அடைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது
 
 இதன் காரணமாக இளநீர் தர்பூசணி வெள்ளரிக்காய் மோர் மற்றும் குளிர்பாகங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது
 
Edited by Siva