1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 15 மார்ச் 2023 (11:11 IST)

தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டிய வெயில் : 3 மாவட்டங்களில் அதிக வெப்பம்..!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வரும் நிலையில் 3 மாவட்டங்களில் 100 டிகிரியை வெப்பம் தாண்டி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் கோடை வெயில் தொடங்கும் என்பதும் ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதமே வெயில் கொளுத்தி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான ஈரோடு சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நேற்று வெயில் 100 டிகிரி தாண்டி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் படிப்படியாக வெப்பம் அதிகரித்து வருவதாகவும் நேற்று ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 100.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் தெரிகிறது. சேலத்தில் 100.5 மற்றும் நாமக்கல்லில் 100.4 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் வரும் நாட்களில் இன்னும் அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
தமிழகத்தில் இந்த ஆண்டு வெயில் கடுமையாக இருக்கும் என்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ள வேண்டும் என்றும் 12 மணி முதல் 4 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது
 
Edited by Mahendran